Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM
வேலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
வேலூர் மாநகர அதிமுக சார்பில்சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சியில், மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி முன்னிலை வகித்தார். வேலூர் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிர மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
பிறகு, மாட்டு வண்டியில் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்ட பலர் ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில், வட்டச்செயலா ளர் ஜெய்சங்கர், இணை செயலாளர் முனியம்மாள், துணை செயலாளர் உமாமகேஸ்வரி, பகுதி செயலாளர் குப்புசாமி, நிர்வாகிகள், நாகு, நாராயணன், பேரவை ரவி, ஜனார்த்தனன், அன்வர்பாஷா, ஏ.ஜி.பாண்டியன், பொதுக் குழு உறுப்பினர் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT