Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் தேனூர், தொண்டமாந்துறை, மேலப்புலியூர், பரவாய், ஓகளுர், கீழப்புலியூர் ஆகிய 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருப்பெயர், கவுள்பாளையம், ரெங்கநாதபுரம், சிறுவாச்சூர், திம்மூர், சிறுகன்பூர், தொண்டபாடி, வேப்பந்தட்டை, கீழப்பெரம்பலூர் மற்றும் பெரம்பலூர் என மேலும் 10 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை தவிர இதர நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் மினி கிளினிக்குகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT