Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM
2021ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கம் திருத்தப் பணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட் சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் ஆகியோரது ஆணையின்படி கடலூர் மாவட் டத்தில் 2021ம் ஆண்டிற்கான சிறப்புசுருக்க முறை திருத்தப் பணியினை கண்காணித்திட சஜ்ஜன்சிங் சு.சவான் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய் யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18-ம் தேதி மற்றும் இம்மாதம் 5-ம் தேதி அவர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்துநேற்று 3-வது ஆய்வுக் கூட்டம்வாக்காளர் பட்டியல் பார்வை யாளர் சஜ்ஜன்சிங் சு.சவான் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்கா ளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய,மாநில அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
வருகிற 20-ம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது. பட்டியல் வெளியிட்ட பின்னரும் வாக்காளர்கள் இணைய வழியாகவும், நேரிடையாகவும் விண்ணப்பித்து தங்கள் பெயர் களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் தங்கள்பகுதியை சேர்ந்த வாக்காளர் களுக்கு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு விடுபட்ட வாக்காளர்களின் விவரத்தினை தெரிவித்து சுருக்க திருத்தப் பணிகளை மேற்கொள்ள உதவிடுமாறும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்தியா, சிதம் பரம் சார் ஆட்சியர் மதுபாலன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தேர்தல் வட் டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பங்கேற்றனர்.
வருகிற 20-ம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது. பட்டியல் வெளியிட்ட பின்னரும் இணைய வழியாகவும், நேரிடையாகவும் விண்ணப்பிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT