Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM

குமரியில் விடிய விடிய மழை

திருநெல்வேலி/ தென்காசி/ கன்னியாகுமரிகன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 90 மிமீ., மழை பெய்தது. முள்ளங்கினாவிளையில் 62, அடையாமடையில் 35, மாம்பழத் துறையாறில் 36, சிவலோகத்தில் 42, சிற்றாறு ஒன்றில் 38, முக்கடல் அணையில் 17 மிமீ., மழை பெய்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.15 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.65 அடியாக வும் உள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கொடு முடியாறு அணைப் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 25 மி.மீ. மழை பதிவானது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,584 கனஅடி தண்ணீர் வந்தது. 1,421 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 116.35 அடியாக இருந்தது. 1,107 கனஅடி தண்ணீர் வரும் நிலையில்10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிறஅணைகளின் நீர்மட்டம் விவரம்:

சேர்வலாறு- 145.37 அடி, வடக்கு பச்சையாறு- 30.50 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடு முடியாறு- 26.50 அடி.

சிவகிரியில் 31 மி.மீ. மழை

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 31 மி.மீ., அடவிநயினார் அணையில் 15, சங்கரன்கோவிலில் 3 ,கருப்பா நதி அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படு கிறது. ராமநதி அணை நீர்மட்டம் 79.50 அடியாகவும், கருப்பா நதி அணை நீர்மட்டம் 64.64 அடியாக வும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 73.25 அடியாகவும் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x