Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்து வதற்குப் பதிலாக வழக்கம்போல நடத்த வலியுறுத்தி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஜன.9-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து, வேளாண் உற் பத்தி ஆணையர் மற்றும் முதன் மைச் செயலாளருக்கு அவர் நேற்று அனுப்பிய மனுவில் தெரிவித்துள் ளதாவது: கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக விவசாயிகள், மின் நுகர்வோர், பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2 மாதங் களுக்கும் மேலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் மட்டும் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது.
தற்போது, பேருந்துகளில் 100 சதவீத பயணிகள் செல்வ தற்கும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களும் வழக் கம்போல நடைபெறுகின்றன.
ஆனால், மாதாந்திர விவசா யிகள் குறைதீர் கூட்டம், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் போன்றவை முறையாக நடைபெறவில்லை. எனவே, ஏற்கெனவே நடத்தப்பட்டதை போல, அரசு விதிமுறைகளின்படி நேரடியாக இக்கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கம்போல நேரில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம் பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஜன.9-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT