Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM
சேலம் மாவட்டத்தில் 10,08,918 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றுமுதல் வழங்கப்படுகிறது. விடுபட்ட வர்களுக்கு 13-ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் துணை ஆட்சி யர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலு வலர் அமுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் ஆட்சியர் கூறியதாவது:
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாட அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஒரு முழுக் கரும்பு, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 10,08,027 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், 891 இலங்கை தமிழர்கள் குடும்பங்கள் என மொத்தம் 10,08,918 ரேஷன் கார்டுதாரர்களுக்கு மொத்தம் ரூ.252.23 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (4-ம் தேதி) தொடங்கி வரும்12-ம் தேதி வரை வழங்க டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு 13-ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ள லாம். மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, அவர்களுக்கு உடனுக்குடன் வழங்கப் படும். பரிசுத் தொகுப்பை பெற வருபவர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இதுதொடர்பான புகார்கள் இருந்தால், ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0427-2451943 என்ற தொலைபேசி எண்ணிலும், வட்ட வழங்கல் அலுவலர் களை சேலம்- 94450 00223, சேலம் (தெற்கு)- 94999 37030, சேலம் (மேற்கு)- 94457 96433, ஏற்காடு- 94450 00225, வாழப்பாடி- 94450 00231, ஆத்தூர்- 94450 00224, கெங்கவல்லி- 94450 00226, பெத்த நாயக்கன் பாளையம்- 94457 96434, சங்ககிரி- 94450 00229, எடப்பாடி- 94450 00230, மேட்டூர்- 94450 00227, ஓமலூர்- 94450 00228, காடையாம்பட்டி- 94457 96435 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT