Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை களில் உற்பத்திக்குத் தேவையான அளவைவிட கூடுதலாக வெடி மருந்துகளை இருப்பு வைக்கக் கூடாது என தேசிய பேரிடர் மீட்புக் குழு அறிவுறுத்தி உள்ளது.
அரக்கோணத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புக் குழு 14-வது பட்டாலியன் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பல்வேறு குழுக்களாகச் சென்று பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்தும், பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு நடத்தி வரு கிறது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டீம் கமாண்டர் மாரிக்கனி தலைமையிலான 20 பேர் கொண்ட குழு, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி முதல் சதுரகிரி, வில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, மம்சாபுரம், அய்யனார்கோயில், அய்யனார் அணை, சிவகாசி பட்டாசு ஆலை களில் தொடர்ந்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரின் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
அப்போது, ஆபத்துக் காலங் களில் உயிர்க் காப்பு நடவடிக் கைகளை மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்தனர்.
பின்னர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கூறியதாவது: சதுரகிரி மலைப் பாதையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண் டும். சிவகாசி பட்டாசு ஆலை களில் இடிதாங்கி பொருத்தப் பட வேண்டும். பட்டாசு ஆலை களில் தேவைக்கு அதிகமாக வெடி மருந்துகளை இருப்பு வைத் திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஆட்சியர் இரா.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT