Published : 29 Dec 2020 03:16 AM
Last Updated : 29 Dec 2020 03:16 AM
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் கண்ணன் (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சீதாலெட்சுமி (31). இவர்களுக்கு அழகு பார்வதி (8), பபிஷ்கா (6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், குடும்பத்துடன் சுரண்டை அருகேஉள்ள குலையனேரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள், நேற்று மாலையில் குடும்பத்துடன் விஷம் குடித்துவிட்டனர். கண்ணன் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சுரண்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT