Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தனியார் பஞ்சாலை உள்ளது. இந்த ஆலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள செல்லையாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் பணிபுரிகின்றனர். இங்கிருந்து 22 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, பந்தல்குடி சாலையில் பஞ்சாலையின் பேருந்து நேற்று காலை சென்றது.
திருச்சுழி அருகே பனையூரில் சென்றபோது, திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் சென்ற செல்லையா புரத்தைச் சேர்ந்த காந்த்(18), பூசையா(29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பத் துக்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். அவர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். பலத்த காய மடைந்த 5 பேர் மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். விபத்தில் காயமடைந்த ஒருவரை இறந்துவிட்டதாகக் கூறி, திருச்சுழி அரசு மருத்துவமனை ஊழியர்கள் பிணவறைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவர் திடீரென எழுந்து குடிக்கத் தண்ணீர் கேட்டதால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.இதை அறிந்த அவரது உறவினர்கள் திருச் சுழி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் மருத் துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்துச் சேதப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT