Array
(
    [mid] => 3
    [aid] => 615868
    [cid] => 533
    [sub_cid] => 542
    [cate] => Todays Paper
    [cate_ta] => இன்றைய செய்தி
    [subcate] => Regional01
    [title] => 
    [title_ta] => திருப்பத்தூர் அருகே  குடிநீர் வழங்கக்கோரி  காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    [keywords] => 
    [desc] => 
    [desc_ta] => திருப்பத்தூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங் களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்
    [author] => செய்திப்பிரிவு
    [author_info] => Array
        (
            [0] => Array
                (
                    [name] => News Desk
                    [name_ta] => செய்திப்பிரிவு
                    [url] => https://www.hindutamil.in/author/1361-News-Desk
                    [img] => https://static.hindutamil.in/hindu/uploads/author/2019/07/15/thumb/1361.jpg
                )

        )

    [content] => 

திருப்பத்தூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங் களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் அடுத்த பெரிய கரம் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான குடிநீர் அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உறிஞ்சப்பட்டு வந்தது. இந்த ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டார் பழுது காரணமாக, கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது, அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங் களுடன் திருப்பத்தூர் -கிருஷ்ண கிரி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கந்திலி காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்ததுடன், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படும் என கூறினர்.

இதனையேற்று, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

[hide_img] => 0 [img] => https://static.hindutamil.in/hindu/uploads/news/2020/12/27/large/615868.jpg [img_caption] => [tag] => திருப்பத்தூர் [cate_url] => https://www.hindutamil.in/news/todays-paper/ [web_url] => https://www.hindutamil.in/news/todays-paper/regional01/615868-.html [created] => 2020-12-27 06:00:19 [published] => 2020-12-27 03:16:12 [emote] => Array ( [e1] => 0 [e2] => 0 [e3] => 0 [e4] => 0 [e5] => 0 [e6] => 0 ) [editor_choice] => Array ( ) [article_type] => V [subscribe] => 0 [content_type] => free [cmdList] => Array ( [comments_lists] => Array ( ) [user_ids] => Array ( ) ) )