Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM
குடிமராமத்துப் பணியில் முறை கேடு செய்ததாகப் பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளர் ஒருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் குளங்கள், வரத்துக் கால்வாய் உள்ளிட்டநீர்நிலைகளைத் தூர்வாரி,கரைகளைப் பலப்படுத்தும் வகையில் குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரம் கண்மாய் வரத்துக் கால்வாயான சிந்தப்பள்ளி ஓடையும் தூர்வாரப்பட்டு கரை களை பலப்படுத்தும் பணிகள் ரூ.62 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளில், குறிப்பிட்ட அகலத்தில் வாய்க்கால் தூர் வாரப்படாமல் குறுகிய அளவில் தூர்வாரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, மராமத்துப் பணிகள் கண் காணிப்புக் குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளருமான செல்வராஜ் சிந்தப்பள்ளி ஓடை தூர்வாரும் பணிகளைப் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திட்டமிடப்பட்டு வரையறுக்கப்பட்ட அளவைவிட குறைந்த அகலம் மட்டுமே தூர்வாரப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து, தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்துள் ளதாகக் கூறி விருதுநகர் பொதுப் பணித்துறை வைப்பாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் குரு சாமி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பொதுப் பணித்துறை அரசு முதன்மைச் செயலர் மாணி க்கவாசகம் பிறப்பித்துள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT