Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM
இலவச பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பல்லூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ராஜா அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அவரது மகன் அரசு மருத்துவராகவும் இருப்பதை மறைத்து, அரசின் இலவசப் பட்டா வாங்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏழை மக்கள் பயன் பெறவே இலவசப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலவசப் பட்டாக்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அனைத்து இலவசப் பட்டாக்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து முறைகேடு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT