Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM
சேலம், ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வரும் கன்னியாகுமரி- பெங்களூரு சிறப்பு தினசரி ரயில் இயக்கம் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி-பெங்களூரு தினசரி சிறப்பு ரயில் (எண்- 06525) பிப்ரவரி 2-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் பெங்களூரு-கன்னியாகுமரி ரயில் (எண்- 06526) ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான நாளை (25-ம் தேதி) சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT