Published : 23 Dec 2020 03:17 AM
Last Updated : 23 Dec 2020 03:17 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்களை மகன்கள் அபகரிப்பு ஆட்சியர் சிவன் அருளிடம் வயதான தம்பதியர் மனு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர் சிவன் அருள். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துக் களை மீட்டுத்தர வேண்டும் என ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் தனது மனைவியுடன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வுக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

இதில், நிலப்பட்டா, விவசாய கடன், வேலை வாய்ப்பு, மின் இணைப்பு, கல்விக்கடன், முதி யோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட 363 பொது நல மனுக்களை ஆட்சியர் சிவன் அருள் பெற்றுக்கொண்டார்.

திருப்பத்தூர் அடுத்த பேராம் பட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கனக சபாபதி (82), அவரது மனைவி ராஜம்மாள் (73) ஆகியோர் அளித்த மனுவில், ‘மின்வாரியத்தில் பணி யாற்றி கடந்த 1992-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றேன். எனக்கு 2 மகன் களும், 2 மகள்களும் உள்ளனர்.அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

எனக்கு சிம்மணபுதூர் கிராமத் தில் 3 ஏக்கர் நிலமும், பேராம்பட்டு பகுதியில் 2 வீடுகளும் உள்ளன. இந்நிலையில், எனது மூத்த மகன் அசோக்குமார் (40), 2-வது மகன் ரமேஷ் (38) ஆகியோர் ஒன்று சேர்ந்து எனக்கு சொந்தமான நிலம், வீடு ஆகியவற்றை எழுதி வாங்கிக்கொண்டனர்.

மேலும், எனக்கு வரும் ஓய்வூதிய பணத்தை கேட்டு என்னையும், எனது மனைவி ராஜம்மாளையும் அடித்து துன்புறுத்துகின்றனர். இதை தட்டிக்கேட்டதால் எங்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர். எனவே, எங்களை ஏமாற்றி அபகரித்துக் கொண்ட வீடுகள், நிலத்தை மீட்டுத்தர வேண்டும்’’என தெரிவித்துள்ளனர்.

நாட்றாம்பள்ளி அடுத்த ஆஞ்ச நேயர் கோயில் வட்டம், மிட்டப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த ஓடை புறம்போக்கு சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிர மித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன் பாட்டில் இருந்த சாலையை ஆக்கிரமித்து அங்கு பள்ளம் தோண்டியுள்ளதால், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தனிநபரிடம் இருந்து பொது வழியை மீட்க வேண்டும்’’என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x