புதன், நவம்பர் 27 2024
Last Updated : 22 Dec, 2020 03:15 AM
Published : 22 Dec 2020 03:15 AM Last Updated : 22 Dec 2020 03:15 AM
கோவை: தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கான 8-வது மாநில சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு இறுதிச் சுற்றுப் போட்டியில் கடலூர் அணி, தூத்துக்குடி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல, பெண்கள் பிரிவில் மதுரை அணி, கோவை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர்ஜி.அருண்குமார் பரிசு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT