Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM
மைசூர்-தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயிலின் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது.
மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் டிச.31 வரையிலும், தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் ஜன.1 வரையிலும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பயணிகள் வசதிக்காக மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜன.1 முதல் 30-ம் தேதி வரையிலும், தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் ஜன.2 முதல் 31-ம் தேதி வரையிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை (டிச.23) முதல் மைசூர்-தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6.30-க்குப் பதிலாக காலை 6.35 மணிக்கும், மதுரையில் இருந்து காலை 7.35 மணிக்குப் பதிலாக காலை 7.50 மணிக்கும், விருதுநகரில் இருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக காலை 8.40 மணிக்கும் புறப்பட்டு முற்பகல் 11.15 மணிக்குப் பதி லாக முற்பகல் 11.10 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்குப் பதிலாக மாலை 4.30 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 5.07-க்குப் பதிலாக மாலை 5.02-க்கும் விருதுநகரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் பதிலாக மாலை 6.35 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 7.45 மணிக்குப் பதிலாக 7.50 மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.10 மணிக்கும் புறப்படும் என ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT