Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஜன. 3-வது வாரத்தில் உண்ணாவிரதம்

மதுரை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜனவரி 3-வது வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் ரா.சண்முகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் அண்மையில் விருதுநகரில் நடைபெற்றது. இதில், புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 3-வது வாரம் சென்னையில் கவனஈர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x