Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

திருத்தப்பட்ட கூடுதல் ஓய்வூதியம்ஓய்வு இன்ஸ்பெக்டர்கள் எதிர்பார்ப்பு

விருதுநகர்: தமிழக காவல்துறையில் 1.1.2006 முதல் 31.12.2015 வரை ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர்கள் 600 பேருக்கு திருத்தப்பட்டக் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்து முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி, ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர்களுக்கு தற்போதைய ஓய்வூதியத் தொகையுடன் ரூ.1,000 கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக கடந்த மாதம் 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி திருத்தப்பட்டக் கூடுதல் ஓய்வூதியத்தை வழங்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் காவல் துறை தலைமை அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், தற்போது வரை அரசாணை செயல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர்கள் சிலர் கூறுகையில், அரசு வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x