Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

சமூக சேவையில் ஈடுபடும் இளையோர் மன்றங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை: இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் சிறப்பாக சமூக சேவை செய்யும் இளையோர் மன்றங்களுக்கு மத்திய அரசு மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஆண்டுதோறும் பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

மதுரை மாவட்ட நேரு யுவகேந் திராவுடன் இணைந்து செயல்படும் இளையோர் மன்றங்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கு மாவட்ட அளவிலான விருதுக்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப் பத்தை “மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், நேரு யுவ கேந்திரா, 30, ஆசாத் தெரு, காந்திநகர், மதுரை-625020” என்ற முகவரியில் நேரில் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பிக்க வரும் 26-ம்தேதி கடைசி நாள் ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு 0452-2539237 மற்றும் 9445662559 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து சிறந்த இளையோர் மன்றத்தை தேர்வு செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x