Published : 21 Dec 2020 03:16 AM
Last Updated : 21 Dec 2020 03:16 AM
சேலத்தை தூய்மையான மாநகர மாக மாற்ற மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நடை பயிற்சியின்போது நடைபாதை குப்பைகளை அகற்றும் பணி சனிக்கிழமை தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணி குடியிருப்போர் நலச் சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் குப்பைகள் சேகரித்து அகற்றும் பணி நடந்தது.
இதில், 600 தன்னார்வலர்கள் பங்கேற்று 1,200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித் தனர். கொண்டலாம்பட்டி மண்டலத் துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த குப்பைகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறும்போது, “குப்பையில்லா மாநகரமாக சேலம் மாநகராட்சியை மாற்றும் பணியின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை தோறும் காலையில் நடைபெறும் சேலம் பிளாகிங் பணியில் இளைஞர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுகா தாரமான தூய்மையான பகுதியாக திகழச்செய்ய வேண்டும்” என்றார்.
இதனிடையே ஊத்துமலை சாலை திடீர் நகரில் உள்ள வீடுகளுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT