Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜன.4 முதல் 3 மாதங்களுக்கு 3 அமர்வுகள் செயல்படும்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மதுரை கிளைக்கு மாறுதல் செய்யப்படுவது வழக்கம். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்போது பணிபுரியும் நீதிபதிகளின் 3 மாத பணிக் காலம் ஜன.3-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து ஜன.4 முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மற்றும் அவர்கள் விசாரிக்க உள்ள வழக்குகளின் வகைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்றக் கிளையில் 3 அமர்வுகள் செயல் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பொது நல மனுக்கள், 2018-ம் ஆண்டு முதல் தாக்கலான ரிட் மேல்முறையீடு மனுக்கள், குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை விசாரிக்கும். நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வு 2017-ம் ஆண்டு வரை தாக்கலான ரிட் மேல்முறையீடு மனுக்கள், நீதிபதிகள் டி.ராஜா, ஜி.இளங்கோவன் ஆகியோர் கொண்ட 3-வது அமர்வு ஆட் கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும்.
நீதிபதி புஷ்பா சத்தியநா ராயணா கல்வி, நிலச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையக ப்படுத்துதல் தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் 2018 முதல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482, 407-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் வழக்குகளையும், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் 2015-ம் ஆண்டு முதல் தாக்கலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் மற்றும் 2014 வரையிலான உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி ஜெ.நிஷாபானு 2019 முதலான உரிமையியல் மேல் முறையீடு, உரிமையியல் சீராய்வு மனுக்கள், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் 2018 முதலான தொழிலாளர், அரசுப் பணி ரிட் மனுக்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள், நீதிபதி என்.சதீஷ்குமார், 2014 வரையிலான முதலாவது, இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மோட்டார் வாகனச் சட்டம், வரி, ஏற்றுமதி இறக்குமதி, மதுவிலக்கு, கனிமங்கள், வனம், தொழில் துறை சார்ந்த ரிட் மனுக்களை விசாரிப்பர்.
நீதிபதி எம்.தண்டபாணி 2017 வரையிலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஆர்.தாரணி 2018 முதலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள் மற்றும் சீராய்வு மனுக்கள், நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி 2018 வரையிலான உரிமையியல் மேல்முறையீடு மனுக்கள், 2015 முதல் 2018 வரையிலான குற்றவியல் சீராய்வு மனுக்களை விசாரிப்பர்.
நீதிபதி எம்.நிர்மல்குமார் ஜாமீன், முன் ஜாமீன் மனுக்கள், நீதிபதி கே.முரளிசங்கர் 2017 வரையிலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் மேல்முறையீடு, சிபிஐ, ஊழல் வழக்குகளை விசாரிப்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT