Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் டிச.21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவெண்பா உற்சவம் டிச.21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். ஆருத்ரா தரிசனம் டிச.29-ம் தேதி நள்ளிரவு முதல் 30-ம் தேதி அதிகாலை வரை நடைபெறும்.
பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை டிச.29-ம் தேதி இரவு 7 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT