Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
விபத்துகளை ஏற்படுத்தும் வகை யில் சாலைகளில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டால் அதனை யாரும் உரிமை கோர முடியாது என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முதல் ஒத்தக் கடை வரையும், ஒத்தக்கடை முதல் திருமோகூர், புதுதாமரைப்பட்டி வரையும் சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து அடிக் கடி பாதிக்கப்படுகிறது.
இந்தச் சாலையில் வளர்நகர், உயர்நீதிமன்றக் கிளை, ஒத்தக் கடை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மாடுகள் சாலைகளின் நடுவே படுத்து ஓய்வெடுப்பதும், சாலை களில் குறுக்கும், நெடுக்குமாக திரிவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக திருவாதவூர் சாலையில் திருமோகூர், புதுதா மரைப்பட்டி வரை நூறுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் தொழுவம்போல் படுத்து ஓய்வெ டுக்கின்றன.
மாட்டுத்தாவணி முதல் ஒத்த க்கடை வரையுள்ள சாலையின் நடுவே தடுப்புச் சுவர் உள் ளது. இதில், சாலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகு திக்கு வாகனங்கள் செல்வதற்காக இடை இடையே உள்ள 10 அடிக்கு பாதைகள் வழியாக அடிக்கடி மாடுகள் சாலைகளின் குறுக்காகப் பாய்கின்றன. அதனால், சாலைகளில் வேகமாக வரும் வாகனங்கள் மாடுகளின் மீது மோதாமல் இருக்க பிரேக் போடும்போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின்றன.
அதுபோல், நூறுக்கும் மேற் பட்ட மாடுகள் திருவாதவூர் சாலையில் படுத்து தூங்குவதால் வாகனங்களில் செல்வோர் சிரமத்துக்குள்ளாகின்றனர். திருவாதவூர், புதுதாமரைப்பட்டி, ஒத்தக்கடை பகுதி மக்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை வீடுகளில் கட்டிப்போட்டு பரா மரிப்பது இல்லை. அவர்கள், ஒவ்வொருவரும் 20 முதல் 50 மாடுகள் வரை மொத்தமாக வளர்க்கின்றனர். மாடுகளை மேய் ச்சலுக்கு ஓட்டிச் செல்லாமல் சாலைகளில் அவிழ்த்துவிடுவதால்
மாடுகள் ஆங்காங்கே திரி கின்றன. காலை, மாலை வேளையில் பால் கறக்க மட்டுமே மாடுகளை அதன் உரிமையாளர்கள் தேடி வந்து ஓட்டிச் செல்கின்றனர். மற்ற நேரங்களில் மாடுகளைக் கண்டுகொள்வதில்லை.
இந்த மாடுகளால் மதுரை-மேலூர், ஒத்தக்கடை-திருவாதவூர் சாலைகளில் அடிக்கடி விபத்தும், போக்குவரத்தும் பாதிப்பதால் மதுரை காவல்துறை சார்பில் மாடுகள் வளர்ப்போருக்கு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதைச் சுவரொட்டியாக அடித்து சாலைகளில் ஓட்டியுள்ளனர்.
அதில், சாலைகளில் மாடுகள் நடமாடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாகிறது. அதனால், தங்கள் மாடுகளை ஒரு வார காலத் துக்குள் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். மீறி மாடுகள் சாலை களில் நடமாடினால் அவற்றை காவல்துறையும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களும் பறிமுதல் செய்துவிடும். பறிமுதல் செய்த மாடுகளுக்கு யாரும் உரிமை கோர முடியாது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT