Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
மதுரை: மதுரைக் கோட்ட முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்களுடைய முழு விவரம், பான்கார்டு, ஆதார் சான்று, முகவரிச் சான்று, கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைப் பதிவுத்தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அருகிலுள்ள அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது domadurai.tn@indiapost.gov.in/ramkumarbaba@gmail.com என்ற இணையதள முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை டிச.31ம் தேதிக்குள் ‘முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் மதுரைக் கோட்டம், மதுரை 625 002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT