Published : 17 Dec 2020 03:18 AM
Last Updated : 17 Dec 2020 03:18 AM

பயிர் காப்பீடு விழிப்புணர்வு பிரச்சாரம்

கிருஷ்ணகிரியில் பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம், பயிர் காப்பீட்டு நிறுவனமான இப்கோ டோக்யோ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் விழிப்புணர்வு வாகனத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்துபேசுகையில், ‘‘இந்த வாகனம் இன்று ( 17-ம் தேதி) ஊத்தங்கரை வட்டாரத்திலும், 18-ம் தேதி வேப்பனப்பள்ளி மற்றும் சூளகிரி வட்டாரத்திலும், 19-ம் தேதி கெலமங்கலம் வட்டாரத்திலும், 20-ம் தேதி ஓசூர் மற்றும் தளி வட்டாரத்திலும் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். எனவே, அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் களும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் விழிப்புணர்வு வாகனத்தைப் பயன்படுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இத்திட்டத்தின் மூலம் பயனடையச் செய்ய வேண்டும்,’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் அலுவலர் அருள்தாஸ், கண்காணிப்பாளர் குருராஜன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x