Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

35 கோயில்களில் சித்த மருந்தகம் அமைக்கப்படும் உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

மதுரை

35 கோயில்களில் சித்த மருந்தகம் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சித்த மருத்துவமனை அமைக்க உத்தரவிடக் கோரி இந்திய மருத்துவ நல அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயவெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசா ரித்தனர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிர மணியம் வாதிட்டார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 5 கோயில்களில் சித்த மருந்தகம் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளது. தற்போது சித்த மருந்தகம் திறக்கப் போதுமான வருவாய் உள்ள கோயில்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி, காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன், வில்லிபுத்தூர் ஆண்டாள், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார்/பத்திரகாளியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், மதுரை அழகர்கோவில் கள் ளழகர், ரங்கம் அரங்க நாதர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், பழநி தண்டாயுதபாணி, மைலாப்பூர் கபாலீஸ்வரர் உட்பட 35 கோயில் களில் சித்த மருந்தகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் விரைவில் அனு மதி பெற்று சித்த மருந்தகம் திறக்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x