Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் 24,278 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் 17 மையங்களில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுடன் தேர்வு நடந்தது.
சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், எஸ்பி தீபா காணிக்கர் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு பணியில் 1,800 போலீஸார் ஈடுபட்டனர்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களில் 18,908 ஆண்களும், 2,801 பெண்களும் தேர்வில் பங்கேற்ற னர். 2,569 பேர் தேர்வில் பங்கேற்க வில்லை.
விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அயோத்தியாப்பட்டணம் அருகே சேலம்- சென்னை புறவழிச்சாலையில் வந்தபோது, பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், பெரியண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுத 8 ஆயிரத்து 538 நபர்கள் விண்ணப்பிருத்திருந்தனர். திருச்செங்கோட்டில் 2 தனியார் கல்லூரிகளில் நடந்த தேர்வில் 6,689 பேர் தேர்வு எழுதினர். 1,849 பேர் தேர்வு எழுத வரவில்லை.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, திண்டல், பெருந்துறை ஆகிய 3 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 1,338 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட மொத்தம் 8,895 பேர் தேர்வு எழுதினர். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிக்கள் என மொத்தம் 900 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
டிஐஜி ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் 25 ஆயிரத்து 863 பேர் விண்ணப் பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 28 மையங்களில் நடந்த தேர்வில் 22 ஆயிரத்து 152 விண்ணப்ப தாரர்கள் பங்கேற்றனர். 3711 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் சேலம் சரக டிஐஜி பிரதீப் குமார் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உடனிருந்தார்.
பலத்த பாதுகாப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத் தேர்வுக்கு 11 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 10 ஆயிரத்து 38 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது. 987 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT