Published : 14 Dec 2020 03:16 AM
Last Updated : 14 Dec 2020 03:16 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் பணிக்காக 53,127 பேர் தேர்வு எழுதினர் ஐஜி-க்கள் அன்பு, பாஸ்கரன், டிஐஜி காமினி ஆகியோர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற காவலர் பணிக்கான நுழைவு தேர்வை ஆய்வு செய்த ஐஜி பாஸ்கரன். அருகில், திருப்பத்தூர் எஸ்பி டாக்டர்.விஜயகுமார். அடுத்த படம்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற காவலர் பணிக்கான நுழைவு தேர்வை ஆய்வு செய்த வேலூர் சரக டிஐஜி காமினி.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/திருவண்ணாமலை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 66 மையங்களில் நேற்று நடைபெற்ற 2-ம் நிலை காவலர் நுழைவுத் தேர்வில் 53 ஆயிரத்து 127 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழகத்தில் காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கு 10 ஆயிரத்து 906 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

இதைத்தொடர்ந்து, 2-ம் நிலை காவலர்களுக்கான முதற்கட்ட நுழைவுத் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டிருந்தன.

காலை 8 மணி முதல் தேர்வு எழுத வந்தவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தேர்வு எழுத வந்த வர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். தேர்வு மையத்துக்குள் செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கால்குலேட்டர் மற்றும் மின்னணு சாதனப்பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக் கப்பட்டிருந்தது. தேர்வு மையங் களுக்கு செல்ல வசதியாக அந்தந்த பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

வேலூர் மாவட்டத்தில் காவலர் பணிக்கான நுழைவுத்தேர்வு எழுத 22 ஆயிரத்து 903 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 20 ஆயிரத்து 550 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 353 பேர் தேர்வு எழுத வரவில்லை. வேலூர் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட வேலூர் சரக டிஐஜி காமினி 17 தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார். மேலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் 1,700 காவலர்கள் கண்காணிப்புப் பணி களில் ஈடுபட்டனர்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 8 ஆயி ரத்து 488 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில், 7 ஆயிரத்து 788 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினர். 700 பேர் தேர்வு எழுத வரவில்லை. ராணிப்பேட்டை மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்ட ஐஜி அன்பு தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி மயில்வாகனன் தலைமை யில் 750 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண் காணிப்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், 12 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன. 10 ஆயிரத்து 11 பேருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இதில், 9 ஆயிரத்து 168 பேர் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 843 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. திருப்பத்தூர் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்ட சென்னை காவலர் பயிற்சிப் பள்ளி ஐஜி பாஸ்கரன் தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில், 850 காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தி.மலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. 22 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 17,424 பேருக்கு அழைப்பு அனுப் பப்பட்டது. இவர்களில், 15,621 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.தி.மலையில் 1,803 பேர் தேர்வு எழுத வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x