Published : 13 Dec 2020 03:17 AM
Last Updated : 13 Dec 2020 03:17 AM

காட்பாடி அருகே உள்ள ஆர்டிஓ சோதனை சாவடிகளில் கணக்கில் வராத ரூ.1.32 லட்சம் பறிமுதல்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மோட் டார் வாகன ஆய்வாளர் சோதனைச் சாவடிகளில் லஞ்சஒழிப்புப் பிரிவு காவல் துறையி னர் நடத்திய திடீர் சோதனை யில், கணக்கில் வராத லஞ்சப் பணம் ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது.

தமிழகம் முழுவதும் கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநில எல்லையில் செயல் படும் மோட்டார் வாகன ஆய் வாளர் சோதனைச் சாவடி களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று அதிகாலை ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். அதன்தொடர்ச்சி யாக, வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தையொட்டி உள்ள கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு சோதனைச் சாவடி களில் துணை காவல் கண் காணிப்பாளர் ஹேமசித்ரா மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய 2 குழுவினர் தனித் தனியாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி யில் மோட்டார் வாகன ஆய் வாளர் ராம் கண்ணன் ஆய்வுப் பணியில் இருந்தார். அவரது மேஜையை ஆய்வு செய்த போது அதில், ரூ.96 ஆயிரம் இருந்தது. அதேபோல், சேர்க் காட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலா என் பவரின் மேஜையை சோதனை யிட்டதில், கணக்கில் வராத பணம் ரூ.36 ஆயிரம் பறிமுதல்செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய சோதனை காலை 9 மணி வரை நீடித்தது.

மேற்கண்ட இரண்டு இடங் களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மொத்தமாக ரூ.1.32 லட்சம் பணம் பறி முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம் கண்ணன், ஜெயமேகலா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து முறையாக வரி செலுத்தாமல் தமிழகம் வரும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், கூடுதல் பயணிகளை ஏற்றி வரும் ஆம்னி பேருந்துகள், கார்கள் என பல்வேறு தரப் பினரிடம் இருந்தும் இவர்கள் லஞ்சப் பணம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x