Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் உள்ளிட்டவை கோரி பெறப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக விண்ணப்பத்தாரர்களின் வீடுகளுக்கு சென்று சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தின் 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,163 வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட 3,277 வாக்குச் சாவடிகளில் கடந்த 21 மற்றும் 22-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள செட்டிச்சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் உள்ள வீடுகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் குறித்து வரப்பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராமன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக 51,849 விண்ணப்பங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (படிவம் 6ஏ) ஒரு விண்ணப்பமும், பெயர் நீக்கம், இருமுறை பதிவானவர்கள் பெயர் நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக 18,468 விண்ணப்பங்களும், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் கோரி 9,134 விண்ணப்பங்களும், ஒரே தொகுதிக்குள் பாகம் விட்டு பாகம் இடமாறிய வாக்காளர்களின் 4,050 விண்ணப்பங்கள் உள்ளிட்ட 83,502 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள் ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், சேலம் (மேற்கு) வட்டாட்சியர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மற்றும் 13-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல், நீக்கம் முகாம் நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர் கள் நாளை (12-ம் தேதி) மற்றும் 13-ம் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் இரண்டாம் முறையாக நடைபெற உள்ளது. இவ்விரு நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT