Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து, இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தியாவில் நவீன மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவ முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி மத்திய அரசு அலோபதி மருத்துவ அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்கள் செய்யலாம் என அறிவித்திருந்தது.
இதை கண்டித்து, சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மருத்துவச் சங்க மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் பிராங்கிளின் கிருபா, முன்னாள் மாவட்ட தலைவர் பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
ஈரோடு
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் பிரபு தலைமை தாங்கினார். மருத்துவர்கள் சீனிவாசன், முகமது அப்சர் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திர பிரபு கூறும்போது, வரும் 11-ம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனை, கிளினிக்குகள் மூடப்படும், என்றார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி இந்திய மருத்துவச் சங்க தலைவர் மருத்துவர் தனசேகரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் கைலாஷ் முன்னிலை வகித்தனர். இதே போல், கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT