Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மறியல், ஆர்ப்பாட்டம் மத்திய மண்டலத்தில் 8 எம்எல்ஏக்கள் உட்பட 7 ஆயிரம் பேர் கைது டெல்டா மாவட்டங்களில் 90 சதவீத கடைகள் அடைப்பு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய மண்டலத்தில் கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 8 எம்எல்ஏக்கல் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் சட்டங்களை மத் திய அரசு திரும்பப் பெற வலியு றுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித் தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பெரியார் சிலை அருகே நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத் தைத் தொடங்கி வைத்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்’’ என்றார்.

தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, மாவட்டம் முழுவ தும் 17இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங் கேற்ற 1,300 பேர் கைது செய் யப்பட்டனர்.

பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹெச்ஏபிபி, பெல் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், பொது வேலைநிறுத்தத் துக்கு ஆதரவு தெரிவித்தும், ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு அளித்ததைக் கண்டித்தும் பொன் மலை ரயில்வே பணிமனை முன் எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் மகாராஜன், மாவட்டச் செயலாளர் உலகநாதன், காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்திப் பேசினர்.

ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மணிவேல் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.செல்லதுரை தலைமை யில் நடைபெற்ற மறியலில் பங் கேற்ற திமுக மாவட்டச் செய லாளர் குன்னம் சி.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் இரா.கிட்டு, மதிமுக மாவட்டச் செயலாளர் துரைராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், தி.க மாவட்டத் தலைவர் தங்கராசு உட்பட 118 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பெரம்பலூரில் சிஐடியு சார்பிலும், குன்னத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.முருகேசன் தலைமை யில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சுயஆட்சி இந்தியா கிறிஸ்டினா, வேலுசாமி, சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல, தோகைமலையில் 38, குளித் தலையில் 25, மாயனூரில் 13 என 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 176 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

திருமயத்தில் நடைபெற்ற சாலை மறியலில் திமுக எம்எல்ஏ எஸ்.ரகு பதி, கீரமங்கலத்தில் நடைபெற்ற சாலை மறியலில் ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 1,249 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோன்று, மாவட்டத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே அனைத்து கட்சி, இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உட்பட 250 பேரும், தஞ்சாவூர் ரயிலடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருவிடைமருதூர், திருப்பனந் தாள், நாச்சியார்கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டங்களில் எம்எல்ஏ கோவி.செழியன் பங்கேற்றார்.

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பிலும், பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒரத்தநாட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் 48 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 3,021 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் திமுக பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் வை.சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மா.வடிவழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடியில் கீழப்பாலம் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்றார். இந்த மறியலில் ஈடுபட்ட டிஆர்பி.ராஜா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் செல்வராஜ் உள் ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டியில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ ஆடலரசன், முன்னாள் எம்எல்ஏக் கள் பழனிசாமி, உலகநாதன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஏராளமானோர் கைதாகினர்.

மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாகை, மயிலாடுதுறையில்...

நாகை மாவட்டம் கீழையூர் கடைத் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்ற சாலை மறியல் போராட் டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையம் முன், பாசன தாரர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் கோபிகணேசன் தலைமையிலும், விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 35 பெண்கள் உட்பட 362 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நாகை எம்எல்ஏவும் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செய லாளருமான மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

காரைக்கால் மாவட்டத்தில்...

காரை பிரதேச விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கடையடைப்பு

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் 90 சதவீத கடைகளும், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 75 சதவீத கடைகளும் அடைக்கப்பட் டிருந்தன. திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்க ளைத் தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறைந்த அளவி லான பேருந்துகளே இயக்கப் பட்டன. மற்ற இடங்களில் பேருந் துகள் வழக்கம்போல இயங்கினாலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆட்டோக்கள் இயக் கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x