Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM
பயிர் காப்பீடு செய்யாதவர்கள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கோரியுள்ளோம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய வந்திருந்த மத்திய குழுவினர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்களை, வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் நேற்று காலை சந்தித்தனர். அப்போது, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ‘எனது தொகுதியில் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை தவிர்க்காமல் ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட தயக்கமில்லை. மாவட்ட நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடு களின்படி பார்க்கிறோம்’ என்றனர். இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அணைக் கட்டு எம்எல்ஏ அளித்த கோரிக்கை மனுக்களை மத்திய குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், வேலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் பார்வையிட சென்ற பகுதிகளில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் உள்ளிட்டோர் உடன் சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கிக் கூறினர்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறும்போது, ‘‘நிவர் புயல் பாதிப்புக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதாது. மிகப்பெரிய சேதாரம் ஏற்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைத்துள்ளோம். பயிர் காப்பீடு செய்யாதவர்களும் இனி பயிர் காப்பீடு செய்ய நேரம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்திருக்க வேண்டும். மத்திய குழுவினர் உப்புக்கு சப்பானியாக வந்து சென்றுள்ளார்கள். இதனால் பெரிய நிவாரணம் இருக்கும் என தெரியவில்லை’’ என்றார்.
டிஎஸ்பியிடம் வாக்குவாதம்
காட்பாடி அடுத்த வள்ளிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி களில் ஆய்வுக்கு சென்ற மத்திய குழுவினரின் பாதுகாப்புக்காக வேலூர் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம் உள்ளிட்ட காவலர்கள் வாகனங்களில் பாதுகாப்புக்காக பின்தொடர்ந்து சென்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் திமுகவினரின் கார்கள், மத்திய குழுவினர் பார்வையிடும் பகுதிக்கு விரைந்து செல்ல முயன்றனர். ஆனால், டிஎஸ்பி யின் கார் வழிவிடாததால் ஆத்திரமடைந்த திமுகவினர், ஒரு கட்டத்தில் அவரது வாகனத்தை வழிமறித்து டிஎஸ்பி விநாயகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT