Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

மொழிப்போர் தியாகிகள் நிதி உதவியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

மதுரை: மொழிப்போர் தியாகிகளுக்கான நிதி உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் தி.சீனிவாசன்(74) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் தற்போது 18 மொழிப்போர் தியாகிகள் அரசின் நிதி உதவியைப் பெற்று வருகின்றனர். நாங்கள் பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசிடம் 2017-ம் ஆண்டில் கோரிக்கை வைத்தோம். தற்போது அக்கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது மருத்துவ உதவி நிதியோடு சேர்த்து ரூ.4 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதனை 2021 பிப்ரவரி 1-ம் தேதி முதல் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x