Published : 07 Dec 2020 03:16 AM
Last Updated : 07 Dec 2020 03:16 AM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைதோறும் காணொலி காட்சி மூலம் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இம்முறையில் இதுவரை 197 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 143 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டும், 48 மனுக்கள் ஏற்க இயலாத நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டும், 6 மனுக்கள் தொடர் நடவடிக்கையிலும் உள்ளன.
இம்மாதத்திலும் காணொலி வாயிலாகவே மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். எனவே, மக்கள் திங்கள்கிழமைதோறும் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை https://tirunelveli.nic.in/ என்ற இணையதள முகவரி மூலம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (District Collector’s Public Grievance Meeting through Video Conference) என்ற இணைப்பின் வழியாக தங்கள் கைபேசி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பொது சேவை மையம் மூலமாகவோ காணொலி காட்சியில் ஆட்சியரை தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT