Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM
பெரியாறு குடிநீர் திட்டத்தால் அதிமுக செல்வாக்கு அதிகரித் துள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
மதுரைக்கு ரூ.1,295 கோடியில் நிறைவேற்றப்படும் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட் டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது. முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் கனவு. அதை முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் மதுரை மாநகரின் குடிநீர் தேவை நிறை வடையும்.
மக்களின் தேவைகளை, அமைச்சர்கள் நிறைவேற்றி வருகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளது.
மக்கள் செல்வாக்கு அதி முகவுக்கு பெருகுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் புலம்புகிறார். அவருக்கு மக் களை சந்திக்க பயம். ஆகையால், பூட்டிய அறையில் இருந்து பேசுகிறார்.
பெரியாறு அணை விவகா ரத்தில் தமிழக உரிமையைப் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத் தந்தார்.
தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத் தருபவராக அவர் இருந் தார். ஆனால், மீத்தேன் திட்டத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். தஞ்சை தரணியைப் பாலைவன மாக்க கையெழுத்திட்டவர் அவர்.
விவசாயிகளின் எதிரி யார் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். கரும்புத் தோட்டத்தில் சிமென்ட் சாலை அமைத்துச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய் தவர். அவரின் கனவு பலிக்காது. அம்மாவின் கனவுகளை நன வாக்கும் ஆட்சி நடத்தும் அதி முகவுக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
அம்ரூத் திட்டத்தில்...
எந்தத் திட்டத்தை முதல்வர் அறிவித்தாலும் அதைச் செயல் படுத்தாமல் இருந்ததில்லை. அந்த ளவுக்கு தமிழகத்தின் வளர்ச் சியில் ஈடுபாட்டுடன் செயல்படு கிறார்.
முல்லைப் பெரியாறு திட்டம் சாதாரணத் திட்டம் இல்லை. அம்ரூத் திட்டத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அம்ரூத் திட்டத்தில் 26 சதவீதம்தான் நிதி ஒதுக்கப்பட்டது. மீதித் தொகையை தமிழக அரசும், மாநகராட்சியும் ஒதுக்கி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக் கின்றன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அடுத்த 50 ஆண்டு களுக்குக் குடிநீர் பிரச்சினை வராது. கரோனா காலத்தில்கூட நேரடியாக மக்களைச் சந்தித்தவர் முதல்வர்.
அவர் தன்னுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்தினார். உள்ளாட்சித் துறையில் 143 விருதுகளைப் பெற்றுள்ளோம். அந்த விருதுகளை வாங்குவதற்கு முதல்வர், துணை முதல்வர் உறுதுணையாக இருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், சரவணன், நீதிபதி, மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT