Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

விடிய, விடிய கன மழை குறிஞ்சிப்பாடியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள சாலையில் மழை நீர் ஆறு போல ஓடியது.

கடலூர்

வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் விடிய,விடிய கன மழை பெய்தது. கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. வாய்க்கால்கள்,ஆறு உள்ளிட்டவைகளில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. விருத்தாசலம், முஷ்ணம், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்தது. நேற்றைய மழையளவு(மில்லிமீட்டரில்): காட்டுமன்னார்கோவில் 74, பரங்கிப்பேட்டை 67, கடலூர் 65.6, அண்ணாமலைநகர் 65.2, புவனகிரி 56, குறிஞ்சிப்பாடி 51, லால்பேட்டை 50, சேத்தியாத்தோப்பு 49.6, சிதம்பரம் 46.6, பண்ருட்டி 45, முஷ்ணம் 41.1 ,விருத்தாசலம் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x