Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

சேலத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம்

சேலம்

சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டிசம்பர் மாத சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் அம்மாப்பேட்டை மண்டலம் 9-வது வார்டில் வசிப்பவர்களுக்கு அல்லிக்குட்டை, தாதம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 6-வது வார்டு மக்களுக்கு காந்தி நகர் பகுதியில் சித்த மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 1-வது வார்டில் உள்ளவர்களுக்கு ஜாகிர் காமநாயக்கன்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

வரும் 12-ம் தேதி கொண்டலாம்பட்டி மண்டலம் 54-வது வார்டில் உள்ளவர்களுக்கு சண்முகா நகர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமும், அம்மாப்பேட்டை மண்டலம் 42-வது வார்டில் உள்ளவர்களுக்கு காசிலட்சுமி கல்யாண மண்டபத்தில் சித்த மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 5-வது வார்டில் உள்ளவர்களுக்கு பெரிய புதூர், குமரன் நகர் அருணகிரி மெட்ரிக் பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடத்தப்பட உள்ளன.

வரும் 19-ம் தேதி சூரமங்கலம் 1-வது வார்டில் காமிநாயக்கன்பட்டி பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 45-வது வார்டில் எஸ்எம்சி லைன் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சித்த மருத்துவ முகாமும், அம்மாப்பேட்டை மண்டலம் 10-வது வார்டில் புத்து மாரியம்மன் கோயில் தெரு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளன.

வரும் 26-ம் தேதி அஸ்தம்பட்டி மண்டலம் 7-வது வார்டில் நாகப்பன் மெயின் ரோடு ஐயந்திரு மாளிகையில் மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 2-வது வார்டில், பெரியம்மாபாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் சித்த மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 51-வது வார்டில் ரங்காபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாம்களும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x