Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ராசிபுரம் வழியாக பாலக்காட்டுக்கு வரும் 8-ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்- பாலக்காடு ரயில் (எண்-02651) சென்னையில் வரும் 8-ம் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், ஜோலார்பேட்டை வழியாக சேலத்துக்கு அதிகாலை 2.35 மணிக்கும், நாமக்கல்லுக்கு 3.39 மணிக்கும், மோகனூருக்கு நள்ளிரவு 3.59 மணிக்கும், கரூருக்கு அதிகாலை 4.23 மணிக்கும் வருகிறது. 9-ம் தேதி காலை 10.10 மணிக்கு பாலக்காடு சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில், பாலக்காடு- சென்னை சென்ட்ரல் ரயில் (எண் -02652), பாலக்காட்டில் 9-ம் தேதி மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு மோகனூருக்கு இரவு 9.24 மணிக்கும், நாமக்கல்லுக்கு 9.41 மணிகும், ராசிபுரத்துக்கு இரவு 10.04 மணிக்கும் , சேலத்துக்கு இரவு 10.35 மணிக்கும், மொரப்பூருக்கு இரவு 11.28 மணிக்கு வந்து 10-ம் தேதி அதிகாலை 4.05 மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தை அடைகிறது.
சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் இடையே தினசரி அதிவிரைவு ரயில் (எண்-02695) 8-ம் தேதி மாலை 3.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு, சேலம், ஈரோடு வழியாக திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 7.50 மணிக்கு சென்றடையும். இதேபோல், மறு மார்க்கத்தில், திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் ரயில் (எண்-02696) 9-ம் தேதி காலை திருவனந்தபுரத்தில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, சேலம் வழியாக, சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 10 மணிக்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் தினசரி அதிவிரைவு ரயில் (எண்- 02685), 8-ம் தேதி காலை சென்னை சென்ட்ரலில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு வழியாக, மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் ரயில் எண்- 02686, மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9-ம் தேதி மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு, சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 8 மணிக்கு சென்றடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT