சனி, நவம்பர் 16 2024
Last Updated : 01 Dec, 2020 03:16 AM
Published : 01 Dec 2020 03:16 AM Last Updated : 01 Dec 2020 03:16 AM
சிவகங்கை: காரைக்குடி அருகே கொத்தரி கிராமத்தைச் சேர்ந்த குமரப்பன் மனைவி வள்ளியம்மை (70). இவரது கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மகன்கள் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும், தனக்கு உணவு வழங்காமல் தனது கணவர் பெயரில் உள்ள சொத்துப் பத்திரங்களை அபகரித்துக் கொண்டதாகவும் கூறி வள்ளியம்மை நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வள்ளியம்மை மனு கொடுத்தார். ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT