Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபம்

பெரம்பலூர்/ அரியலூர்

பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண் டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு பிரம்மரிஷி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு திருவருட்பா பாராயணம், கோபூஜை, அஸ்வ பூஜைகள், சித்தர்கள் யாகபூஜை ஆகியவை சிவனடியார்கள் முன்னிலையில் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தீபக்கொப்பரை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்குப் பிறகு டிராக்டர் மூலம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மலை உச்சிக்கு தீபக்கொப்பரை கொண்டு செல்லப் பட்டது. தொடர்ந்து, மகாசித்தர்கள் டிரஸ்ட் இயக்குநர்கள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் தலைமை யில், மாலை 6 மணியளவில் பிரம்மாண்ட கொப்பரையில் 300 கிலோ நெய், 1,000 லிட்டர் விளக்கு எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் இடப்பட்டு, 1,008 மீட்டர் நீளம் கொண்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மகாசித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, இயக்குநர் ராதாமாதாஜி மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

கங்கைகொண்ட சோழபுரத்தில்...

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள கணக்க விநாயகருக்கு நேற்று அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பிரகதீஸ்வரருக்கு 108 லிட்டரில் பால் அபிஷேகம் மற்றும் சந்தனம், திரவியப் பொடி, மாவுப் பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, பிரகதீஸ்வரர் முன்பு தீப ஒளியும், கோயில் வாயில் முன்பு சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திர சோழன் இளைஞர் அணி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x