Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

திருச்சி- புதுகை பேருந்துக்கு அபராதம் விதித்த பெரம்பலூர் மாவட்ட போலீஸார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் நாரண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலசேகர்(59). தனியார் பேருந்து உரிமையாளரான இவரது செல்போனுக்கு நேற்று இரவு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி- புதுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் இவருக்கு சொந்தமான பேருந்தில் படிக்கட்டில் பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ரூ.100, ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாததற்கு ரூ.100 என ரூ.200 அபராதத்தை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸார் விதித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கமலசேகர், குன்னம் போலீஸாரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தவறுதலாக பேருந்துக்கு அபராதம் விதிக்கப் பட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து கமலசேகர் கூறும்போது, “குன்னம் போலீஸா ரால் அபராதம் விதிக்கப்பட்ட நேரத்தில், எனது பேருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்தது. இதுதொடர்பாக, குன்னம் போலீஸாரிடம் கேட்டபோது, ஜீப் ஒன்றுக்கு விதிக்க வேண்டிய அபராதம், தவறுதலாக எனது பேருந்துக்கு விதிக்கப்பட்டதாக பதிலளித்தனர். படிக்கட்டில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாக ஜீப்-க்கு எப்படி அபராதம் விதிக்க முடியும் என தெரியவில்லை’’ என்றார்.

இதுகுறித்து குன்னம் போலீ ஸாரிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தினமும் அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யும்படி இலக்கு நிர்ண யிக்கப்படுவதால், போலீஸார் மன உளைச்சலுடன் பணிபுரிகின்றனர். அப்போது, இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர், அந்த பேருந்து உரிமையாளரிடம் வருத் தம் தெரிவித்துவிட்டார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x