Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மரக்காணம் பகுதிகளில் புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஆயத்தம் முகத்துவாரங்கள், கடலோர கிராமங்களில் கூடுதல் கண்காணிப்பு

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சி.முட்லூர் அருகே உள்ள வெள்ளாற்றை பார்வையிட்டனர்.

விழுப்புரம்/கடலூர்

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு களும் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் பலத்த சேதங்களை எதிர்கொள்ளும் மாவட்டமாக கருதப்படும் கடலூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 120 பேர் அடங்கி தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் கடலூர் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. பரங்கிப்பேட்டை பகுதியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், நேற்று புவனகிரி வட்ட பகுதிக்கு உட்பட்ட தீர்த்தாம்பாளையம், பூவாலை, கொத்தட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆற்றோரம் குடியிருக்கும் பொதுமக்களிடம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

பின்னர் சி.முட்லூர் அருகேஉள்ள வெள்ளாற்றை பார்வை யிட்டனர்.

கடலூர் துறைமுகத்தில் நேற்று7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர்தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது.

கடலூரில் பெண்ணை, கெடிலம் ஆற்றின் முகத்துவாரம், தாழங்குடா பகுதி முகத்துவாரங்களில் மண் மேடுகளை பொதுப்பணித் துறையினர் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீராணம் ஏரி கரைகளை அதிகாரி கள் கண்காணித்து வருகின்றனர்.

கடலூர்

‘நிவர்’ புயலால் பாதிப்பு ஏற்பட்டால் கடலூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 04142-220700, 233933,221383, 221113 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04142-231284, சிதம்பரம்சார் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04144-222256, 290037 என்ற எண்ணிலும், விருத்தாசலம் சார்ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04143- 260248 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம்

‘நிவர்’ புயல் எச்சரிக்கையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் நேற்று பிற்பகல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் அதிகரித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே பெட்ரோல் பங்குகள், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்தது.

கடைவீதிகளில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப் பட்டது.

விழுப்புரம் மாவட்ட கட்டுப் பாடு அறையை 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 04146 223265 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் திண்டி வனம் சார் ஆட்சியரை 04147-222100, 9445000423, விழுப்புரம் கோட்டாட்சியர் 04146-224790, 9445000424, வட்டாட்சியர்கள் திண்டிவனம்; ஒ4147222090, 9445000523, விழுப்புரம் 04146-222524,9445000525, மரக்காணம்; 04147-239449, 9488761754, விக்கி ரவாண்டி 04146 233132, 9486009403,செஞ்சி, 04145-222007, 9445000524, வானூர் 0413-2677391, மேல்மலையனூர் 04145-234209, 9843965846, கண்டாச்சிபுரம் 04153-231666, 9944006049, திருவெண்ணை நல்லூர் 04153 234789,9865574281 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள லாம் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘நிவர்’ புயல் முன் தடுப்புக்காக விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.புயல் பாதுகாப்புப் பணிகளில் டிஐஜி எழிலரசன் மேற்பார்வையில், எஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏடிஎஸ்பி தேவ நாதன், 12 டிஎஸ்பிக்கள், 30 இன்ஸ் பெக்டர்கள்,200 சப் இன்ஸ் பெக்டர்கள் உட்பட 600 போலீஸார் மாவட்டம் முழு வதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மரக்காணம், ஆட்சிகுப்பம், பொம்மை யார்பாளையம் மீனவ கிராமங் களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்தார். அப்போது பொதுமக்கள் மத்தி யில் ஆட்சியர் கூறியது:

கடலூர் மாவட்டத்தில்

191 தங்கும் இடங்கள் தயார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், “கடலூர் மாவட்டத்தில் 38 பகுதிகள் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. 34 பகுதிகள் மிக பாதிப்பு, 19 பகுதிகள் மிதமான பாதிப்பு, 167 பகுதிகள் குறைந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என மொத்தம் 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார். நாளை (இன்று) மாலை புயல் கரை யைக் கடக்கக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுவதால் பொதுமக்க ளின் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்படும்.

மரக்காணம் பகுதி மீனவர் கிராமங்களில் 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x