Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் துணை இயக்குநர் ந.மகாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விமானப் படையில் (ஏர்மேன்) ஆள் சேர்ப்பு புதுச்சேரி இந்திரா காந்தி அரங்கில் டிச.10 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க www.airmenselection.cdac.in இணையதளத்தில் நவ.27, 28-ல் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள்/டிப்ளமோ முடித்தவர்கள், கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT