Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM
மதுரை விமான நிலையத்தில் 7 விமானங்கள் நிறுத்த வசதியு ள்ள நிலையில், மேலும் கூடுதலாக 5 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் நிறுத்து வதற்கான வசதி உருவாக்கப்படும் என விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நிவர் புயல் காரணமாக மதுரை விமான நிலையத்திலும் சில முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
அதனடிப்படையில் விமானநிலைய ஓடுதளம் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் வழிந்தோடும் பாதைகள் ஆய்வு செய்து சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையக் கட்டிட ங்களில் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சோதனை செய் யப்பட்டு அவை இறுக்கமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானப் பயணிகள் இறங்கு பாலம் (ஏரோ பிரிட்ஜ்) ஆடாமல் இருக்க கட்டி வைக்கப்பட்டுள்ளது. உயர்மின் கோபுர விளக்குகள் சரியான முறையில் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் ஏற்கெனவே 7 விமானங்கள் நிற்க இடவசதி உள்ளது. அதில் 2 விமானங்கள் வெளியே இருந்து மதுரையில் நிறுத்துவதற்கு கேட்டுக்கொண்டதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை விமான நிலையத்தில் கூடுதலாக 5 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் நிறுத்துவதற்கு சிறப்பு வசதி உருவாக்கப்படுகிறது. மதுரை விமான நிலையத்தில் தற்போது 2,300 மீட்டர் ஓடுதளம் உள் ளது. கூடுதலாக 1500 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே 66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி மீதமுள்ள 430 ஏக்கருக்கு ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நில உரிமையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய விமான நிலைய முனையக் கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் வேறு இடத்தில் அமைக்கப்படுகிறது.
அந்தக் கட்டிடத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, தொழில்நுட்ப மைய அலுவலகம் இயங்குவதற்கான கட்டிடம் ரூ.84 கோடியில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, முனைய மேலாளர் சுபம் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT