Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM
தமிழர்களின் பெருமையை உலக றியச் செய்த மன்னன் ராஜேந்திர சோழனுக்கு, கங்கைகொண்ட சோழபுரத்தில் 83 அடி உயரத்தில் சிலை நிறுவி, மணிமண்டபமும் கட்ட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சீராத்தோப் பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி வளாகத்தில் அந்த அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கோயில்களில் அனைத்து திருவிழாக்களையும் சமூக இடைவெளியுடன் பாரம்பரிய முறைப்படி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த மன்னன் ராஜேந்திர சோழனுக்கு, கங்கைகொண்ட சோழபுரத்தில் 83 அடி உயரத்தில் சிலை நிறுவி, மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது குறித்து காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்திடம் செய்தியா ளர்கள் கேட்டதற்கு, ‘‘ஒரு இடத்தில் திருநீறு பூச மறுத்து, மற்றொரு இடத்தில் தருமபுரம் ஆதீனத்தைச் சந்திப்பது உதயநிதியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது’’ என்றார்.
முன்னதாக, இந்து முன்னணி யின் பல்வேறு அணிகளுக்கு தனித்தனி இலச்சினையை (லோகோ) காடேஸ்வரா சி.சுப்பிர மணியம் வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT