Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் ஈரோடு மாணவர் 5-வது இடமும், சேலம் மாணவி 10-வது இடமும் பெற்றுள்ளனர்.
மருத்துவக் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி தமிழகஅரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலை யில், சேலம் மாவட்டம் காடையாம் பட்டியை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.ரம்யா, நீட் தேர்வில் 513 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் 10-வது இடமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாநில அளவில் 7-வது இடம் பெற்றுள்ளார்.
இவரது தந்தை கோவிந்தராஜ், தாய் நதியா. இருவரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்யா கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 533 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். அப்போது, அரசுப் பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரு வாரம் மட்டும் சென்ற நிலையில், பயிற்சி மையம் தொலை தூரத்தில் இருந்ததால் பயிற்சிக்கு செல்லவில்லை. கடந்த ஆண்டு நீட் தேர்வில் 120 மதிப்பெண் பெற்றார்.
இந்தாண்டு நீட் தேர்வுக்கு ராசிபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து தேர்வில் மாநில அளவில் தரவரிசையில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஊர்மக்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாணவி ஜி.ரம்யா கூறும்போது, “தற்போதைய பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பெற்றோரின் ஆசி, ஆசிரியர்களின் ஊக்கம், மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் எனது மருத்துவக் கனவு நனவாகியுள்ளது. இருதயநோய் சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்பது எனது ஆசை” என்றார்.
ரம்யாவின் தந்தை கோவிந்தராஜ் கூறும்போது, “எனக்கு 3 மகள்கள். மூத்த மகள் ரம்யா, 2-வது மகள் கவுசல்யா பிளஸ் 1 படிக்கிறார். 3-வது மகள் மதுமித்யா 6-ம் வகுப்பு படிக்கிறார். நெசவுத் தொழில் வருவாய் குறைவாக இருந்தாலும், ரம்யாவின் மருத்துவக் கனவை நனவாக்க அவரை தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தோம். ரம்யா மாநில அளவில் சிறப்பிடம் பெற்று மருத்துவக் கல்விக்கு தேர்வாகி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.
77 பேர் தேர்வு
மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 77 பேர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பூபதி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றுள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT