Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நவ.20, 21 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்குத் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்வுக்கு வருப வர்கள் தங்களது கல்வி, வயது சான்று அசல், நகல் மற்றும் 2 மார்பளவுப் புகைப்படம் கொண்டு வரவேண்டும்.
மேலும் ஊர்க்காவல் படைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மதுரை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நவ.17 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக நேரில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT