Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு பயணிகள் நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக் கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு ள்ளன.
இதன்படி நவ.12 முதல் சென்னை எழும்பூர்-செங்கோட் டை வாரம் மும்முறை சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட நான்கு பெட்டிகளும், எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில், எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில், எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு ரயில் ஆகியவற்றில் முறையே இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியும், எழும்பூர்-நாகர்கோவில் வாரம் இருமுறை சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி கொண்ட ஆறு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் எழும்பூர்-கன்னியா குமரி-எழும்பூர், எழும்பூர்-தூத்துக் குடி-எழும்பூர் ஆகிய சிறப்பு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 02605 எழும்பூர்-காரைக்குடி சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இத்த கவலை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT