Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

மதுரையில் இறுதிக் கட்ட தீபாவளி விற்பனை விளக்குத்தூண், கீழவாசல் பகுதியில் திரண்ட மக்கள்

விளக்குத்தூண் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் கூட்டத்தைக் கண்காணிக்கும் பெண் காவலர்.

மதுரை

மதுரையில் இறுதிக் கட்ட தீபாவளி விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. புத்தாடைகளை வாங்க விளக்குத்தூண், கீழவாசல், மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

மதுரையில் தீபாவளிப் பண்டி கைக்காக புத்தாடைகள் விற்பனை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விடும். கரோனா ஊரடங்கு, மக்களிடம் பணப் புழக்கம் இல் லாதது ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சற்று தாமதமாகக் களை கட்டத் தொடங்கியது.

தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, கீழ சித்திரை வீதி, காமராஜர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளிலும், சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடைகளிலும் ஜீன்ஸ், டீ-சர்ட், கைலி, பிளாஸ்டிக் வாளி, போர்வை, காலணிகள், சமையல் பாத்திரங்கள் உட்பட ஏராள மான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களும் தங்களுக்குத் தேவை யான பொருட்களை குறைந்த விலையில் நேற்று வாங்கிச் சென்றனர்.

வழக்கம் போல் துணி, பட்டாசுக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இனிப்பகங்களில் ஓரளவுக்கு விற்பனை இருந் தாலும், கடந்த ஆண்டைவிட 30 சதவீத விற்பனை, 20 சதவீத உற்பத்தி குறைக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

போனஸ் போன்ற பிரச்சி னையால் தீபாவளிக்கு டிவி, வாஷிங் மெஷின் போன்ற மின் னணுப் பொருட்கள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை என்றும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது குறைவு எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு 24 மணி நேரமே இருப்பதால் பஜார்களில் இறுதிக் கட்ட விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது. கீழமாசி வீதியில் பலசரக்கு பொருட்கள் விற் பனையும் அதிகரித்தது.

உள்ளூர் மக்களைவிட கிராம த்தினர், வெளியூர் மக்கள் திரண்டதால் நகரில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை நிறுத்த உரிய ஏற்பாடு செய்யாததால் கீழவாசல், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களிலும் வாகன நெரிசல் அதிகமாக இரு ந்தது.

நான்கு மாசி வீதிகளிலும் தற்காலிகக் கோபுரங்கள் அமைத்து பிக்பாக்கெட், வழிப்பறித் திருடர் களைப் போலீஸார் கண்காணித் தனர். சிசிடிவிக்கள் மூலம் திடீர் நகர், விளக்குத்தூண் காவல் நிலையங்களில் கண்காணிக்கப் பட்டது. முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகள், உடமைகள், குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கைகளைப் போலீ ஸார் தொடர்ந்து மைக் மூலம் தெரிவித்தனர். தொலைநோக்கி மூலமும் பெண் போலீஸார் கூட் டத்தைக் கண்காணித்தனர்.

மதுரையில் பெரும்பாலும் பிளாட்பாரக் கடைகளில் பொருட் களை வாங்க விரும்பும் மக்களால் இன்றும் (நவ.13) கூட்டம் அதி கரிக்கும். எனவே கூடுதல் போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x